SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கப்பல் படை தளபதியாக நியமனம்

2021-09-25@ 01:18:37

லாஸ்ஏஞ்சல்ஸ், : ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்து கப்பல் படை தளபதி என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25வது படமாக ‘நோ டைம் டு டை’ உருவாகி உள்ளது. இதில், டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்த டேனியல் கிரேக், இதுவரை கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.

‘நோ டைம் டு டை’ படம்தான் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டேனியல் கிரேக்கை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரவமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்