SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேட்டை தொடரும்

2021-09-25@ 00:08:50

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றபோது பல்வேறு சவால்கள் காத்திருந்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு முதல்வர் பதவியில் அமர்ந்த நாள் முதல் மு.க.ஸ்டாலினுக்கு காத்திருந்தது. தனது அமைச்சரவை சகாக்களையும், எம்எல்ஏக்களையும் தொகுதிகளுக்கு முடுக்கி விட்டு பெருந் தொற்றை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் என அறிவித்தார். இந்த பார்முலாவை இந்தியாவிற்கு சொல்லிக் கொடுத்தவரே தமிழக முதல்வர் தான். இதற்கு பிறகு தான் மோடி பிறந்த நாளன்று மெகா தடுப்பூசி முகாமிற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்தது. இந்த வரிசையில் தமிழக முதல்வர் தற்போது எடுத்துள்ள ஆயுதம் தான் ரவுடிகள் வேட்டை. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரம் இடங்களில் நடந்த சோதனையில் 870 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, அரிவாள் என 250க்கும் மேற்பட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதைத் தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்கும் பணியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.  மிரட்டல், உருட்டல், பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பணத்திற்காக கொலை செய்தல் என ரவுடிகள் தங்களுக்கென்று ஒரு ராஜ்யம் அமைத்துக் கொண்டு உலா வருகின்றனர். இதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்து தனக்கென ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்றனர். சமூக வலைதளங்கள் தற்போது பெருகி விட்ட நிலையில் வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாசாரம் ரவுடிகளிடம் அதிகரித்துள்ளது. இதனால்  பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது. ரவுடிகள் கொட்டத்தை ஒழித்தால் தான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியும். சிறந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்த முடியும்.

இதனால் தான் ஒரே நாள் இரவில் ரகசிய வேட்டையை துவக்கியது தமிழக போலீஸ். நீண்ட நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், சந்தேகப்படும் ரவுடிகள் வீடுகளில் திடீரென போலீஸ் நுழைந்து ஆயுதங்களை கைப்பற்றி ரவுடிகளை தூக்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த அதிரடி ரவுடிகள் வேட்டை தொடரும் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கில் சிறந்த நிபுணத்துவம்  பெற்றவர் டிஜிபி சைலேந்திரபாபு. குற்றவாளிகளை பிடிப்பதிலும், கொள்ளையர்கள் வேட்டையிலும் தமிழக போலீசார் சளைத்தவர்கள் அல்ல. ரவுடிகள் கொட்டத்தை ஒழித்து தமிழகத்தில் அமைதியை நிலை நாட்டி, தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் தமிழகம்தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்