SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாது வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் : உச்சநீதிமன்றம்!!

2021-09-24@ 14:47:07

புதுடெல்லி:மேகதாது அணை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்தது. அதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆக. 11ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு இவ்வழக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில், ‘சட்ட விதிகளுக்கு உட்பட்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்து குழு அமைத்தது. இவ்விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத்தது மட்டுமின்றி, தடையும் விதித்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக அரசின் தரப்பில், மேகதாது விசயத்தில் தமிழ்நாடு தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘மேகதாது விசயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதுவரை உச்சநீதிமன்றத்தால் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்