வரலாற்றில் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்: தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் உச்சம்.!
2021-09-24@ 10:29:02

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நேற்று பங்குச் சந்தை முடிவின்போதே சென்செக்ஸ் 59,885 புள்ளிகளில் இருந்தது. மேலும், நிப்டி 17,883 புள்ளிகளில் இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 60000 புள்ளிகளை தாண்டும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
எதிர்பார்த்ததை போலவே இன்று சென்செக்ஸ் 60000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60000 புள்ளிகளை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் சென்செக்ஸ் 60,214.68 புள்ளிகளாக உள்ளது. நிப்டி தற்போது 17900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது. சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்டிஎல் டெக், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகிந்த்ரா ஆகிய பங்குகள் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, மகிந்த்ரா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.
அமெரிக்க ஃபிடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று அமெரிக்க மார்க்கெட்டுகள் 1 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். இதுபோக, கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அன்லாக் மனநிலை உருவாகியுள்ளதும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் செய்திகள்
ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை.: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை
சரிவுடன் தொடங்கிய தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு..!!
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: இன்று காலையில் ரூ.240 உயர்ந்தது, பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
சற்று உயர்வை காணும் தங்க விலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800-க்கு விற்பனை
சற்று சரிவை காணும் தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760-க்கு விற்பனை
தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,000
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!