SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் உளவுத்துறை சதி அம்பலம் பண்டிகை உற்சாகத்தை தகர்க்க இந்தியாவில் பயங்கர தாக்குதல்: பஞ்சாப்பில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளால் பீதி

2021-09-24@ 00:03:58

புதுடெல்லி: இந்தியாவில் நவராத்திரி விழா, தீபாவளி உள்ளிட்ட  பண்டிகைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். மேலும்,  கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் மக்கள் நடமாட்டமும், பயணங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்த பண்டிகை காலத்தின்போது இந்தியாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளின் மூலம் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கான சதித் திட்டத்தை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ வகுத்துள்ளது. இதை கண்டுபிடித்துள்ள இந்திய உளவுத்துறைகள், அனைத்து மாநிலங்களையும் உஷாராக இருக்கும்படி கடந்த 18ம் தேதி எச்சரித்துள்ளன.டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் சதியுடன் ஊடுருவி இருந்த 6 தீவிரவாதிகளை கடந்த 14ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டு பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதுவும், ஐஎஸ்ஐ.யின் சதியில் ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் இந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அதிநவீன வெடிகுண்டுகள் அடங்கிய டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், அதி பயங்கர கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தரண் தரண் மாவட்டத்தில்  உள்ள பகவான்புரா கிராமத்தில் காரில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து கைக்துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பயங்கர வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்களின் பெயர் கமல்பிரீத் சிங் மான், குல்வீந்தர் சிங், கன்வார் பால் சிங் என தெரிய வந்துள்ளது. இவர்கள் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கி வருவதாலும், டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டு வருவதாலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

* பஞ்சாப்பில் இந்த மாதத்தில் இதுவரையில் 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.
* இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த மாதம் தொடக்கத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
* அமிர்தசரசில் உள்ள தலேக் என்ற கிராமத்தில் கடந்த 8ம் தேதி 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் சிக்கின.
* பக்வாரா என்ற இடத்தில் கடந்த 20ம் தேதி ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டையும், 2 கையெறி குண்டுகளும் சிக்கின.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்