SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உபி முதல்வர் போன இடமெல்லாம் தீட்டு: புனித நீரை தெளிக்கும் சமாஜ்வாடி

2021-09-24@ 00:03:56

சம்பால்: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால், கட்சிகள் அடிக்கும் ஸ்டன்ட்களும் அதிகமாகி விட்டது. குறிப்பாக, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் உள்ள பாஜ., பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறது. அதில் ஒன்றாக, சம்பால் மாவட்டத்தில் உள்ள கைலாதேவி பகுதியில் ரூ.275 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல்லை கடந்த செவ்வாயன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டினார். விழா முடிந்ததம், இந்த மாவட்டத்தில் யோகி பார்வையிட்ட இடங்களை எல்லாம் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் கங்கை நீரை தெளித்தனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் பிரிவு மாநில தலைவர் பவேஷ் யாதவ் கூறுகையில், ‘‘முதல்வர் ஆதித்யநாத் மா கைலாதேவி கோயிலை பார்வையிடாமல் அவமதித்து விட்டார். எனவேதான், அவர் சென்ற இடங்களை புனிதப்படுத்தும் இந்த நடவடிக்கையை செய்கிறோம்,’’ என்றார். இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக உபி போலீசார் வழக்கு பதிவு செய்து பவேஷ் யாதவ் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.  

‘யோகி பங்களாவை புனிதப்படுத்துவோம்’
 சமாஜ்வாடி கட்சி தலைவரும், உபி முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்த பிறகு, லக்னோவில் நான் குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்தேன். அங்கு ஆதித்யநாத் குடியேறுவதற்கு முன்பாக மடாதிபதிகளும், குருமார்களும் அழைக்கப்பட்டு புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2022ல் ஆட்சி பொறுப்பேற்கும் போதும் நாங்களும் இதுபோல் கங்கை நீரை தெளித்து அந்த இடத்தை புனிதப்படுத்துவோம்,” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்