SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

2021-09-24@ 00:03:44

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சரோஜினி தெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (24). நேற்று முன்தினம் இரவு ஆனஸ்ட்ராஜ், வீட்டில் சாப்பிட்டு முடித்து தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அறைக்கு சென்று பார்த்தபோது, ஆனஸ்ட்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆனஸ்ட்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.புகாரின்படி குன்றத்தூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனஸ்ட்ராஜ் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் சில நாட்களாக, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்