SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தியால்பேட்டை - ராஜகுலம் சாலையில் ஆபத்தான வளைவில் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்த டிரைலர் லாரி

2021-09-24@ 00:03:41

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை - ராஜகுலம் சாலையில் சென்ற டிரைலர் லாரி, ஆபத்தான வளைவில் திரும்பியபோது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை - ராஜகுலம் அருகே புறவழிச்சாலை உள்ளது. இச்சாலை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் ஏராளமானோர் வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும்  மறைமலைநகர், செங்கல்பட்டு, வாலாஜாபாத், சாலவாக்கம், இளையனார் வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் இச்சாலை வழியாக சென்று வருகின்றன.

இந்த புறவழிச்சாலையில் பல்வேறு பகுதிகளில், ஆபத்தான குறுகிய வளைவுகள் உள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில், லாரிகள் இந்த வளைவுகளை கடக்கும்போது, அருகில் உள்ள கால்வாய்களில், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. இதனை சீரமைத்து, விரிவாக்கம் ெசய்து, அங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நத்தப்பேட்டை வளைவு பகுதியில், இரும்பு உருளைகளை ஏற்றி சென்ற டிரைலர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கால்வாயில், தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, டிரைவர் உயிர் தப்பினார்.

தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். ஆனால், லாரி எங்கிருந்து வந்தது. எங்கு செல்கிறது என தெரியவில்லை. டிரைவரும், அங்கிருந்து சென்றுவிட்டதால், நேற்று இரவு வரை, பள்ளத்தில் விழுந்த லாரியை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், முத்தியால்பேட்டை- ராஜகுலம் வரை செல்லும் புறவழிச்சாலையையொட்டி நத்தப்பேட்டை, களியனூர், வையாவூர் உள்பட பல கிராம பகுதிகளில், ஆபத்தான குறுகிய வளைவுகள் உள்ளன. இவ்வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் கனரக லாரிகள், குறுகிய வளைவுகளை கடந்து செல்லும்போது, அருகில் உள்ள கால்வாய்களில், தவறி விழுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர், குறுகிய வளைவு உள்ள பகுதிகளை உடனடியாக விரிவாக்கம் செய்து விபத்துக்கள் இல்லாத சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்