SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மது அருந்த பணம் தராததால் ஆத்திரம் தோசை கல்லால் அடித்து பாட்டி கொலை: பேரனுக்கு வலை

2021-09-24@ 00:03:39

புழல்: மது அருந்த பணம் தர மறுத்த பாட்டியை தோசைக் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்த பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.சோழவரம் அருகே ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட பசுவன்பாளையம், முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (72). ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர். இவரது மகன் ரங்கநாதன், வானகரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெகன் (30), கடந்த 20ம் தேதி பாட்டி சுசீலா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஜெகன், மீண்டும் மது அருந்த பணம் கேட்டு பாட்டியிடம் தகராறு செய்துள்ளார்.

 அவர் தர மறுத்து, கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், சமையலறையில் இருந்த தோசை கல்லை எடுத்து, பாட்டி சுசீலாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சுசீலா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதை பார்த்த ஜெகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்திலேயே, சுசீலா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், சுசீலாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்