ஆவடி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்
2021-09-24@ 00:03:38

ஆவடி: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, அரவிந்த் நகரை சேர்ந்தவர் வசந்தா(60). இவரது கணவர் முனுசாமி காலமாகிவிட்டார். நேற்று முன்தினம் வசந்தா, கோயம்பேட்டில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் நேற்று மதியம் அங்கிருந்து மீண்டும் மாநகர பஸ் மூலமாக ஆவடியில் இறங்கி பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து அவர் நகைகளை போட்டு கொண்டு பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருக்க வேண்டாம். இங்கு திருடர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, நகைகளை கழட்டி உங்களது பையில் வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
அதன் பிறகு, வசந்தா அணிந்திருந்த நகைகளை, மர்ம நபரே வாங்கி பையில் வைத்துள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து வசந்தா பையை சோதனை செய்தார். அப்போது, அவரது பையிலிருந்து 5 சவரன் நகைகள் காணவில்லை. மேலும், மர்ம நபர் தான் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வசந்தா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகைகளை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!