SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரஞ்சீவியுடன் நடிக்க சாய் பல்லவி மறுத்தது ஏன்?

2021-09-24@ 00:03:25

சென்னை:  தமிழில் மாரி 2, தியா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். தமிழில் அஜித்தின் தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்தார். அந்த வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசினார்கள். ஹீரோயினுக்கான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சிரஞ்சீவி பேசும்போது, ‘நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை’ என தமாஷாக கூறினார்.பின்னர் பேசிய சாய்பல்லவி, ‘ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு கொஞ்சம் பயம். அதனால் தான் போலா ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்தேன். இல்லை என்றால் உங்களுடன் (சிரஞ்சீவி) நடிக்கும் வாய்ப்பை தவறவிடுவேனா?. நான் எங்கு சென்றாலும் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். ராம் சரணை சந்தித்தபோது, உங்களை எப்பொழுது பார்ப்பேன் என்று எனக்கு நானே கேட்பேன். உங்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெருமை சார்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்