SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

2021-09-24@ 00:03:24

சென்னை: காருக்கான பேன்ஸி நம்பருக்கு ரூ.17 லட்சம் செலவழித்துள்ளார் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் விலை உயர்ந்த லம்போர்கினி கார் ஒன்றை வாங்கினார் ஜூனியர் என்டிஆர். இந்த காரின் விலை ரூ.3.50 கோடி. இந்தியாவில் முதன்முதலில் இந்த வகை காரை வாங்கியவர் இவர்தான்.

புது காருக்கு பேன்ஸி நம்பரை வாங்க விரும்பினார் ஜூனியர் என்டிஆர். அவரது வீட்டில் ஏற்கனவே உள்ள கார்களின் எண், 9999 என வருவதுபோல் வாங்கி வைத்துள்ளார். அதேபோல் லம்போர்கினி காருக்கும் பேன்ஸி எண் வாங்குவதற்காக மட்டும் 17 லட்சம் ரூபாயை அவர் செலவழித்துள்ளார். அதற்காக நடந்த ஏலத்தில் TS 09 FS 9999 என்ற எண்ணை ரூ.17 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். எண் கணிதத்தின் மீது ஜூனியர் என்டிஆருக்கு அதிக நம்பிக்கை என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்