SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலீட்டாளர்களின் முகவரி

2021-09-24@ 00:02:05

ஒரு மாநிலம் அல்லது நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மிகவும் இன்றியமையாதது. இந்த இரண்டையும் இரு கண்கள் போல பாவித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். கல்விப்பருவம் முடித்த மாணவர்களின் அடுத்த முக்கிய இலக்கு வேலைவாய்ப்பு. அதை மனதில் கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற குறைந்த காலத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்கட்டமாக அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில், கடந்த ஜூலை மாதம் ‘‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’’ என்ற சந்திப்பை தமிழக அரசு நடத்தியது. இதில் ரூ.4,250 கோடி மதிப்பீட்டில், சுமார் 21,630 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.7,117 கோடி மதிப்பீட்டில் 5  திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மொத்தமாக 49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி மதிப்பில் சுமார் 83,432 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தெற்காசியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எனது தலைமையிலான அரசின் இலக்கு’’ என்றார். அந்த இலக்கை அடையும் மற்றொரு முயற்சியாக, சென்னையில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ மாநாடு நடந்தது. ஏற்றுமதி, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,120.54 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் சுமார் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பொதுவாக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பெரும் தொழில் நிறுவனங்கள் அமையும் என்ற சூழல் இருந்து வந்தது. தற்போது, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி என தென்மாவட்டங்களிலும் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் மிக முக்கியமானவை. அதாவது, ‘‘2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு  அடைந்திட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதை அடைய வேண்டுமெனில், தற்போது 26 பில்லியன் அமெரிக்க  டாலராக  இருக்கும்  மாநிலத்தின் ஏற்றுமதியை, 2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க  டாலராக உயர்த்திட வேண்டும்.  உலக வர்த்தக வரைபடத்தில், தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வருகின்றோம்’’ என்றார்.  ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் சுமார் 1.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பிரகாசமான விடியலை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. வரும் ஆண்டுகளில் மென்மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, உலக அரங்கில் தமிழகம் பேசப்படும் மாநில
மாக உருவாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்