SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடுங்கையூர் குப்பைமேட்டில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளில் இருந்து ஜல்லி - மணல் தயாரிப்பு: ஐஐடி ஆய்வு வந்ததும் விற்பனை

2021-09-23@ 19:35:17

பெரம்பூர்: கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளில் இருந்து ஜல்லி கற்கள், மணல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி ஆய்வு முடிவுகள் வந்ததும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் குப்பை சேகரிக்கப்பட்டு அவற்றை பல வழிகளில் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கப்படுவதுடன் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குக்கு திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை,ராயபுரம், திருவிக.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 2,200 டன் வரை குப்பை கொண்டுவந்து கொட்டப்படுகிறது.

இதில் கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிரித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாஸ் கிளீனிங் மூலம் இந்த கட்டிட கழிவுகளை ராட்சத இயந்திரங்கள் கொண்டு பொடியாக்கி அதில் இருந்து 3 விதமான ஜல்லி கற்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து 2 விதமான மணல்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. எம் சாண்ட் மணல் உள்பட பல்வேறு மணல்  தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட மணல், ஜல்லிகளை தர ஆய்வுக்காக ஐஐடிக்கு  அனுப்பி உள்ளனர். தர ஆய்வு முடிவுகள் வந்தவுடன் மணல், ஜல்லி விற்பனை தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில், செயற் பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சண்முகம், துப்புரவு ஆய்வாளர் குமார் உள்பட அதிகாரிகள் கட்டிட கழிவுகளை தரம் பிரிக்கும் பணியை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்