SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

2021-09-23@ 15:04:35

சென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பில் இருந்து வருகிறார் வெங்கடாசலம். இந்நிலையில் மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

தற்போது இந்த பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தின் உள்ளே சென்று சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்