SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறோம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!

2021-09-23@ 14:37:05

சென்னை : தமிழகத்தில் 3வது மிகப்பெரிய தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆணைப்புலி மரத்தின் வரலாற்று குறிப்பேட்டை நாளை முதல்வர் திறந்து வைக்கிறார். இதனை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை  20,000 முகாம்களின் மூலம் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில், இன்று 14 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டு 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஜனவரி முதல் தற்போது வரை 2,733 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவிலியர்கள் நியமனத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கோவையை ஒப்பிடும் போது சென்னையில் மக்கள் தொகை அதிகம் இருப்பினும் தொற்று எண்ணிக்கை 200க்குள் மட்டுமே உள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 9,47,284 பேர் பயன் அடைந்துள்ளனர்.நீட் விவகாரத்தில் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறோம்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்