SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலையோரங்களில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

2021-09-23@ 12:14:36

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் சாலையோர கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.  தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் கால்வாய்கள், கழிவு நீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நேற்று துவங்கி வரும் 25ம் தேதி வரை இந்த மெகா தூர்வாரும் பணிகள் அரசு துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் உள்ள கால்வாய்கள், சிறிய பாலங்கள் மற்றும் பாலங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய நான் உட்கோட்டங்களில் உள்ள சாலையோர கால்வாய்கள், மோரிகள் (கல்வெட்டுகள்), சிறு பாலங்கள், பாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவை தூர்வாரப்பட்டுள்ளது.

மொத்தம் 5 கி.மீ. தொலைவிற்கு சாலையோர கால்வாய்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழாய் பாலங்களிலும் இந்த தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி துவங்கி இப்பணிகள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும் 6 பொக்லைன் இயந்திரம் 150 சாலை பணியாளர்கள் மற்றும் 25 தற்காலிக பணியாளர்களை கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோர கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள குழாய் பாலங்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் 25ம் தேதி வரை அனைத்து சாலைகளிலும் மழை நீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீலகிரி ேகாட்ட பொறியாளர் குழந்தைராஜ் தெரிவித்தார். தூர் வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்