SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

300 நாட்களை கடந்தது டெல்லி விவசாயிகள் போராட்டம்!: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்..!!

2021-09-23@ 12:03:00

டெல்லி: ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 300 நாட்களை கடந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக வரும் 27ம் தேதி பாரத் பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும், சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் டெல்லி எல்லையில் கடந்த நவம்பர் 27ம் தேதி முதல் மழை, வெயிலை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை தெளிவாக தெரிந்தாலும் ஒன்றிய அரசு அவற்றை ஏற்க மறுக்கிறது.

ஒன்றிய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசின் இந்த விடாப்பிடியான போக்கை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் நடத்தி வரும் தொடர் போராட்டம் தற்போது 300 நாட்களை கடந்துள்ளது. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு எதிராக வரும் 27ம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்