SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரட்டும் வேட்டை

2021-09-23@ 00:13:05

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வங்கியில் நகைக்கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் ரூ2 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரத்து 700 மதிப்பிலான 261 நகை பொட்டலங்கள் மாயமாகிவிட்டது. வங்கி தலைவர் முருகேச பாண்டியன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சார்-பதிவாளர், செயலாளர், துணை செயலாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை மோசடி செய்துவிட்டு, அதற்கு போலியாக ஒரு டெபாசிட் ‘பாண்ட்’வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெபாசிட் பணத்துக்கு போலியான பாண்ட் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்னும் பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயரில் போலியாக நிரந்தர வைப்பு நிதி என்ற பெயரில் ரசீது வழங்கி, சுமார் ரூ4 கோடி மோசடி நடந்தது கடந்த ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன்,  நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வழங்கியதாக சுமார் ரூ3 கோடி அளவு மோசடி நடந்துள்ளது கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள தொடக் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகுவைத்து பணம் மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதாக ரூ16.58 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ1 கோடி வரை பணம் மோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இப்படி, தினந்தோறும் கூட்டுறவு சங்க மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை, எல்லாமே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்துள்ளது. தற்போது அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது இவை ஒவ்வொன்றாக வெளிவருகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த மோசடி நடந்துள்ளது.  

கடந்த ஆட்சியாளர்கள், இந்த மோசடி மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, துணை போயுள்ளனர். அதன் காரணமாக, இம்மோசடி புற்றீசல்போல் பெருகியுள்ளது. இந்த மோசடிக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்கவும், குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பவும் இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. தொடரட்டும் வேட்டை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்