SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கோவிலுக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு

2021-09-22@ 16:40:57

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்.,20 முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. மேலும், இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதி செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் 24ம் தேதி காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்