SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவளம் கடற்கரைக்கு 'ப்ளூ ஃப்ளாக்' விருது அறிவிப்பு!!

2021-09-22@ 16:15:28

சென்னை : கோவளம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.அதன் அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அங்கீகாரமான நீலக்கொடி சான்றிதழை வழங்கும் டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆகிய எட்டு இந்தியக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்