SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராமப்புற வளர்ச்சியில் ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்டின் 25 ஆண்டு கால பங்களிப்பு: “ஏ சைலண்ட் ரெவலியூஷன்” புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியீடு..!

2021-09-22@ 16:13:10

சென்னை: சுந்தரம்-கிளைட்டன் லிட் மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு பிரிவான, ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (Srinivasan Services Trust (SST), the social arm of Sundaram-Clayton Limited and TVS Motor Company)-ன் 25 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில், ’ஏ சைலண்ட் ரெவலியூஷன்’ – த ஜர்னி ஆஃப் த ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்’ [‘A Silent Revolution- The Journey of the Srinivasan Services Trust’] என்ற நூலை ஹார்பர்காலின்ஸ் இந்தியா [HarperCollins India]  வெளியிட்டுள்ளது. இந்நூலை திருமதி ஸ்நிக்தா பருபுடி [Ms. Snigdha Parupudi] எழுதியுள்ளார். கிராமப்புற சமூகங்கள் வாழ்வில் தன்னிறைவு மற்றும் அதிகாரம் பெறுவதற்காக, முற்றிலுமாக மாற்றமடைய, அவர்களை குறித்து ஒரு உருக்கமான பாணியில் விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பிரதி  தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் திரு. வேணு ஸ்ரீநிவாசன் வழங்கினார்.

பின்தங்கிய கிராமப்புற சமூகங்களில் ஒரு சமூக, வாழ்வாதார மாற்றங்களை உருவாக்கிய எஸ்எஸ்டியின் உணர்வுப்பூர்வமான பயணத்தை ’ஏ சைலண்ட் ரெவலியூஷன்’ – த ஜர்னி ஆஃப் த ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்’  ( ‘A Silent Revolution- The Journey of the Srinivasan Services Trust’) நூல் வாசகர்களிடம் அறிமுகம் செய்கிறது. கிராமப்புற இந்தியாவில் சமூக-பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் நிலையை எவ்வாறு உயர்த்துவது என உணர்வுப்பூர்மாக செயல்பட்ட எஸ்எஸ்டி-யின் பயணத்தை ஊக்கமளிக்கும் உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆறு முக்கிய தூண்களான, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல், சமூக மற்றும் கலாச்சார செயல்பாடு, உள்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை டிரஸ்ட் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் எவ்வாறு கையாண்டது என்பதையும் காலவரிசையில் இந்நூல் விவரிக்கிறது.

மேலும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின்  தலைவர் மற்றும் ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்டின்  நிர்வாக டிரஸ்டி திரு.வேணு ஸ்ரீநிவாசன் (Mr. Venu Srinivasan, Chairman, TVS Motor Company & Managing Trustee, Srinivasan Services Trust) கூறுகையில், “25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எஸ்எஸ்டியை நிறுவிய பொழுது, எங்களது சமூக சேவையை எவ்வாறு செய்யப் போகிறோம் என எங்களுக்கு உறுதியாக தெரியாது. டிரஸ்டை பராமரிப்பதற்கான குழுவின் வழிகாட்டுதல்களை மையமாகக் கொண்டு, மதிப்பை உருவாக்குதல், சமூகத்திற்கு அவசியமான சேவைகளைச் செய்தல் ஆகியவற்றை முன்னெடுத்தோம். நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்க விரும்பினோம். உள்நாட்டு சமூகங்களுடன் அயராது உழைத்து ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் உருவாக்கிய கண்ணியம், வளமை, நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்த நூல் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இந்த புத்தகத்தின் மூலம் ஒரு மாற்றத்துக்கான சாளரத்தை திறந்து விட்ட திருமதி ஸ்நிக்தா பருபுடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் அதன் நிறுவனர்களின் கொள்கையை கோடிட்டு காட்டும் விதமாக, தன்னிறைவு மற்றும் வளமான கிராமப்புற சமூகங்களை உருவாக்க, எஸ்எஸ்டி மேற்கொண்ட முற்போக்கான சகிப்புதன்மையுள்ள செயல்பாடுகளை இந்த நூல் தொகுத்தளிக்கிறது. எஸ்எஸ்டி-யின் சமூகப் பங்களிப்பினால் பலன் அடைந்தவர்கள்  மற்றும் எஸ்எஸ்டி-யின் களப் பணியாளர்கள் ஆகியோரிடமிருந்து அனுபவங்களை நூலாசிரியர் மிக அழகாக பெற்று,  சமூக மாற்றத்திற்கு என்ன தேவை என்பது குறித்தும், சாதகமான மாற்றம் நிகழ்வதை நெருங்கியிருந்து பார்க்கும் பார்வையையும் வழங்குகிறது.

திரு.ஸ்ரீநிவாசன் மேலும் கூறுகையில், “சிறிய துளிகள் சேர்ந்து இறுதியில் ஒரு மிகப் பெரிய அமேசான் நதியாக பாய்வதைப் போல, எஸ்எஸ்டி-யில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது முன்னேற்றத்திற்காக இணைந்து இந்த ஆற்றல்மிக்க மாற்றங்களை சாத்தியமாக்கியுள்ளனர்.  உண்மையில் இதைதான் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். கிராமங்களில் எங்கள் சமூக செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி கொண்டே  இருக்கும்போது, எங்களது  பணிகள் மற்ற  வணிகக் குழுக்களையும் இப்பணியில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் தேவைப்படுவோருக்கு அவசியமான, சமூகப் பணிகளை இன்னும் பெருமளவில் மேற்கொள்ளமுடியும்., நிலையான வளர்ச்சியை அவர்களுக்கும், சமூகத்திற்கும் வழங்க முடியும் ” என்றார்.

’ஏ சைலண்ட் ரெவலியூஷன்’ – த ஜர்னி ஆஃப் த ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்’ [‘A Silent Revolution- The Journey of the Srinivasan Services Trust’] புத்தகத்தின் நூலாசிரியர் திருமதி ஸ்நிக்தா புருபுடி கூறுகையில், “இந்த நூலை எழுதும் போது, ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் மேற்கொள்ளும் சமூகப் பணிகளில் இருக்கும் எளிமை மற்றும் வலிமை இவை இரண்டினால் ஈர்க்கப்பட்டேன். எஸ்எஸ்டி-யின் ஊழியர்கள் மற்றும் உறுதிமிக்க சமூகங்களுடன் இணைந்து பணியாற்றியதை எனது பாக்கியமாக கருதுகிறேன். நேர்மையான, உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய சமூகப் பங்களிப்புகளை எஸ்எஸ்டி மூலமாக  செயல்படுத்தி வரும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியுடன் இப்புத்தகத்திற்காக இணைந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எஸ்எஸ்டி, எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் மிக அமைதியாக, வெளியே தெரியாமல் செய்திருக்கும் சமூகப் பங்களிப்புகள் ஒரு புரட்சிக்கு இணையானவை.  . இன்று முன்னெப்போதையும் விட நம்பிக்கை மற்றும் சாத்தியமாக்குதல் ஆகிய இரண்டையும் எடுத்துரைக்கும் இது போன்ற வெற்றிப் பயணங்களின் கதைகள் உலகிற்கு தேவை என நான் நம்புகிறேன்” என்றார்.

சமூகத்தின் மனப்பான்மையை மாற்றுவதிலும், சமூகத்தை மாற்றுவதிலும் எஸ்எஸ்டி மேற்கொண்டு வரும் சமூகப் பங்களிப்புகளின் செயல்வடிவம்,  கடந்த சில ஆண்டுகளாக உருவான பொருளாதார வளர்ச்சியில் விடுப்பட்ட, இந்தியாவின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் நலிவுற்ற சமூகத்திற்கு அதிகாரமளிக்கிறது.. புதிய இந்தியாவை உருவாக்க பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகள் உதவும் முக்கியமான காலகட்டத்தில் இந்த நூல் வெளியாகிறது. ஒரு முன்னோடித்துவமான,  சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட  திட்டங்கள் எவ்வாறு வாழ்க்கையை மாற்ற இயலும் என்பதை இந்நூல் சித்தரிக்கிறது.

இந்த நூல் –லிங்க்- ஆகியவற்றிலும் கிடைக்கிறது.

நூலாசிரியர் குறித்து : திருமதி ஸ்நிக்தா புருபுடி மேற்கு கனடா மற்றும் தென்னிந்தியாவில் வளர்ந்தவர். சென்னை பல்கலை கழகத்தில் தங்க பதக்கம் பெற்றவர். மேலும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர். சமத்துவமின்மை, புலம் பெயர்தல், நகர்ப்புற வாழ்க்கை குறிப்பாக பெண்கள் பிரச்னை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவரது படைப்புகள் பாரபோலா, நேஷனல் ஜியாகிராஃபிக் டிராவல்லர், ஓப்பன் மேகஸின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நாளேடுகளில் வெளியாகியுள்ளன. ஸ்நிக்தா தனது கணவர் மற்றும் இரண்டு பூனைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். அது அவருடைய முதல் நூலாகும்.

ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்:  ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST), சுந்தரம்-கிளைட்டன் லிட் மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட் நிறுவனத்திற்கு சொந்தமான, லாப நோக்கமற்ற, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். 1996-ம் ஆண்டிலிருந்து கிராமப்புற மேம்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்களில் எஸ்எஸ்டி செயல்பட்டு வருகிறது. எஸ்எஸ்டியின் முழுமையான அணுகுமுறை கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி,  சுகாதாரம், கல்வி, உள்கட்டுமானம், சுற்றுச்சூழல், சமூக-கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்