SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் முதன்முறையாக விஐடி வேளாண்மைத்துறை சார்பில் நெற்பயிர்களுக்கு ட்ரோன் மூலம் வேப்ப எண்ணெய் தெளிக்க மாணவர்களுக்கு பயிற்சி

2021-09-22@ 16:04:31

வேலூர்: தமிழகத்தில் முதன்முறையாக விஐடி வேளாண்மைத்துறை சார்பில், நெற்பயிருக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட வேப்ப எண்ணெய் ட்ரோன் மூலம் தெளிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இயற்கை முறையில் நெல் சாகுபடிக்கு ட்ரோன்களின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல் வேளாண் மாணவர்கள் இயற்கையோடு தொழில்நுட்பத்தை ஒன்றிணைந்து கற்றுக்கொண்டால் விவசாயத்தில் பெரும் மாற்றத்தைக்கொண்டுவர முடியும். பொதுவாக விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து வேளாண் மாணவர்களுக்கு தெரிய வருவதில்லை.

விஐடியின் வேளாண்மை துறை மாணவர்கள் விவசாயத்தோடு தொழில்நுட்பத்தை பயில பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதன்முதலாக விஐடியில் நெற்பயிருக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட வேப்ப எண்ணெய் ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை இருக்கும்போது ஓரளவுக்கு ட்ரோன் வசதியுடன் எவ்வாறு விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்ற கள விளக்கமும் விவசாயிகளுக்கு  அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் நெல்லுக்கு இயற்கை வேளாண்மை சாகுபடி முறை மற்றும் துல்லிய பண்ணைய முறையில் ட்ரோன்களை பயன்படுத்துவது, தொழில்நுட்ப விவரங்கள், விவசாயத்தில் ட்ரோனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சி வகுப்பு விஐடி வேளாண்மை துறை மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து நடத்தியது என விஐடி வேளாண்மை துறை பேராசிரியர் திருமலைக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, விஐடி வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட தொழில்நுட்ப கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வேளாண்மை துறை மாணவர்களும் விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில், விஐடி வேளாண்மை துறை தலைவர் முனைவர் பாபு, பேராசிரியர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்