வடிகால்களை தூய்மையாக்க நாகையில் மாபெரும் தூய்மை பணி துவக்கம்-பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
2021-09-21@ 12:21:11

நாகை : மழைநீர் வடிகால்களில் உள்ள அனைத்து படிவுகளையும் அகற்றும் மாபெரும் முகாம் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று தொடங்கியது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்குவதால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையும் உள்ளது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து உட்புகுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட நேற்று (20ம் தேதி) மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் வரும் 25ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெறும். மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரப்படவுள்ளது. இதில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர்வடிகால்வாரியம், நகராட்சி, பேரூராட்சி, மின்சாரவாரியம் என அனைத்து துறைகளும் தங்களது பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி அதில் உள்ள படிவுகளை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கு முன்எச்சரிக்கையாக அனைத்து துறை அலுவலர்களையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார். நகராட்சி ஆணையர் தேவி, நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்கு கூடுதலாக 300 காலர் கேமரா-போலீசார் தகவல்
ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்-தொழிலாளிக்கு வலை
வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!
75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : விவசாயிகள் மகிழ்ச்சி!!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு
கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை