ஓணம் லாட்டரியில் முதல் பரிசு ரூ.12 கோடிக்கு இருவர் போட்டி
2021-09-21@ 01:35:16

திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடிக்கு இருவர் உரிமை கோருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசாக ரூ. 12 கோடி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.12 கோடி வயநாடு மாவட்டம் பனமரம் பகுதியை சேர்ந்த செய்யது அலவி(45) என்பவருக்கு விழுந்ததாக தகவல் வெளியானது. துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் பணி புரிந்து வரும் இவர் சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள நண்பருக்கு கூகுள் பே மூலம் ரூ.300 அனுப்பி லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார்.
செய்யது அலவிக்காக இவரது நண்பர் எடுத்த அந்த லாட்டரிக்குதான் முதல் பரிசு கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீர் திருப்பமாக கொச்சி மரடு பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்ற ஆட்டோ டிரைவர் தனக்கு தான் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளதாக கூறினார். டிக்கெட்டை வீட்டுக்கு அருகில் உள்ள கனரா வங்கியில் டெபாசிட் செய்து விட்டதாக கூறிய அவர் அதற்கான சான்றிதழை காட்டினார். லாட்டரியில் விழுந்த முதல் பரிசு ரூ.12 கோடிக்கு இருவர் உரிமை கொண்டாடுவதால் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Tags:
Onam lottery first prize Rs 12 crore two competition ஓணம் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி இருவர் போட்டிமேலும் செய்திகள்
ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை
லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!