SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிணைய வேண்டும்

2021-09-21@ 00:37:42

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், தீவிரவாதம் வலுவடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும் என வல்லரசு நாடுகள் முழக்கமிடுகின்றன. ஆனால், ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய உடன், தலிபான்களுக்கு சீனா, ரஷ்யா ஆதரவளித்தது மூலம் வல்லரசு நாடுகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனி இந்நாடுகளுக்கு எதிரியாக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும். வல்லரசு நாடுகளுக்கு இடையே உள்ள போட்டியால் தீவிரவாத அமைப்புகள் ஊக்கம் பெறுகின்றன. இனி ஆப்கான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டாலும் ஆச்சரியமில்லை.

சீனா, ரஷ்யா ஆதரவுக்கரம்  நீட்டினாலும், அமெரிக்காவை எதிர்த்து ஆப்கானில் தலிபான்களால் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும், தலிபான்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. ஆப்கான் விஷயத்தில் அமெரிக்கா ஒதுங்கி விட்டதாக எண்ணவேண்டாம். இனி ஆப்கானில் உள்ளடி வேலைகளை அமெரிக்கா கச்சிதமாக செய்யும். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் ஆப்கானில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறி தாக்குதல் நடத்தும். அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த, இந்திய விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஆப்கானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருவதால், இந்தியாவுக்கு மட்டுமே  தீவிரவாத அச்சுறுத்தல் என உலக நாடுகள் தவறாக எண்ணுகின்றன. பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நவீன முறையில் தாக்குதல்களை தீவிரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர். எனவே கூடுதல் கவனத்துடன் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டியது அவசியம். இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும். முக்கியமாக, ஆப்கானை தலைமையிடமாக கொண்டு போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் ஆயுத விற்பனை சூடு பிடிக்கும்.

இந்தியாவில் உளவு அமைப்புகள் கண்காணிப்பு வளையத்தை அதிகப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தின் பாதிப்பை ஒவ்வொரு நாடும்  உணர்ந்துள்ளன. இருப்பினும், தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணையாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், உலக நாடுகள் ஒன்றிணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்தால், தீவிரவாத அமைப்புகளால் தலை தூக்க முடியாது. முக்கியமாக, வல்லரசு  நாடுகள் தங்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மையை விட்டு விட்டு, வளர்ச்சி மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தீவிரவாதத்துக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்