SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க விசா தொடர்பான முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டுவந்த புதிய முறையை ரத்து செய்தது கலிபோர்னியா நீதிமன்றம்

2021-09-19@ 09:10:04

வாஷிங்டன்: அமெரிக்க விசா தொடர்பான முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டுவந்த புதிய முறையை ரத்து செய்து கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கிப் பணிபுரிவதற்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்கி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த விசா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற வகையில் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. இந்த விசாவைத்தான் வெளிநாட்டினரை பணியாற்ற அமெரிக்க நிறுவனங்கள் நம்பியுள்ளன.

இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. மேலும், அந்த நாட்டில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினர் 20 ஆயிரம் பேருக்கும் இந்த விசா தரப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்று முழங்கினார். மேலும், ஊதியத்தின் அடிப்படையில்தான் எச்-1பி விசா என புதிய விதியைக் கொண்டு வந்தார். அதிக சம்பளம் வாங்குவோருக்குத்தான் அமெரிக்க விசா வழங்கப்படும் என்பதால், இது வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் தடைக்கல்லாக அமைந்தது.

இதனை, எதிர்த்து கலிபோர்னியா வடக்கு மாவட்ட கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரே ஒயிட், டிரம்ப் கொண்டு வந்த மாற்றத்தை ரத்துசெய்து அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்