SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு தேர்வு உங்கள் உயிரை விட பெரிதல்ல!: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க நடிகர் சூர்யா அறிவுறுத்தல்..!!

2021-09-18@ 14:08:10

சென்னை: மாணவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. தேர்வு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன; ஒரு தேர்வு உங்கள் உயிரை விட பெரிதல்ல. நானும் பல்வேறு தேர்வுக்களில் தோல்வி அடைந்துள்ளேன். மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்கள் கூட மனம் விட்டு பேசுமாறு மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பயம், கவலை, வேதனை, விரக்தி இவை அனைத்தும் சிறிது நேரத்தில் மறையும் விஷயங்கள். தற்கொலை செய்து கொள்வது உங்களை பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மாணவர்களை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கின்றோம். நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயித்து விடலாம். அச்சமில்லை... அச்சமில்லை... அச்சம் என்பது இல்லையே என்று மாணவர்களுக்கு நடிகை சூர்யா அறிவுரை கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • robo-teacher-2

    இனி டீச்சர்னா பயம் கிடையாது: பாலஸ்தீனத்தில் ஆசிரியராக களமிறக்கப்பட்டுள்ள ரோபோட்...நட்பு பாராட்டும் மாணவர்கள்..!!

  • dog-police-2

    சென்னை எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி: ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் பள்ளி மாணவர்கள்...கை குலுக்கி உற்சாகம்..!!

  • MKStalin_Inspectetd_Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • IncomeTax_Raid_SaravanaStores

    சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

  • Landslide_Tirupati

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்