SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு

2021-09-18@ 08:26:08

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதில், கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசி 78% செயல் திறன் வாய்ந்தது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.  இதனால் கோவாக்சின் தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதவாது, உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடையப்பெறுகிறது. இக்கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்