ஏற்காடு மலைப்பாதையில் விபத்து படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி
2021-09-18@ 00:23:46

ஏற்காடு,: சென்னையில் இருந்து குறும்பட படப்பிடிப்பிற்காக வந்தபோது ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் சென்னையைச் சேர்ந்த பலர் முகாமிட்டு கடந்த சில நாட்களாக சீரியல்கள், குறும்படங்கள் என படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே பக்கோடா பாய்ண்ட் பகுதியில் குறும்படத்திற்காக படப்பிடிப்பு நடத்தினர். பின்னர், பெலாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக மாலை 5 மணியளவில் வேனில் புறப்பட்டுச் சென்றனர்.
வேனில், படக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வளைவான பகுதியில் சென்றபோது, எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனைக்கண்ட வேன் டிரைவர் சங்கர், மெதுவாக சாலையோரம் திருப்பினார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி, அருகில் உள்ள 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த பாண்டியன் (41), தேனியைச் சேர்ந்த சஞ்சய்(33) ஆகியோர் உயிரிழந்தனர். கௌரிசங்கர் மற்றும் பேச்சியப்பன் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலின்பேரில் ஏற்காடு போலீசார் சென்று உடல்களை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்தவர்களையும் சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மூணாறில் நிற்காமல் கொட்டுது கனமழை சாலைகளில் மண் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் விரட்டியடித்தனர்
உண்டியல் பணத்தை திருட முயற்சி தடுத்தவருக்கு கடப்பாரை அடி; காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைது
வால்பாறையில் தொடரும் கனமழை மண்சரிவு; வீடுகள் இடிந்து சேதம்: நகராட்சி கமிஷனர் உயிர் தப்பினார்
சென்னைக்கு கடத்த முயன்றபோது மினி வேனுடன்; ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்
பந்தலூர் அருகே உணவு தேடி வந்து வீட்டை சூறையாடிய காட்டு யானை: மக்கள் அச்சம்
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!