SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிரடி தொடரட்டும்

2021-09-18@ 00:03:41

அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த வேலுமணி, வீரமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், தங்களது துறையில் மெகா ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதை தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னரிடம் ஆதாரங்களுடன் புகாரும் தெரிவித்திருந்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியின்போது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருந்தார்.இதனடிப்படையில் கடந்த ஜூலை மாதம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில், கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சாயப்பட்டறைகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த மாதம் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, கோவை, திண்டுக்கல் உட்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது. மேற்கண்ட 2 சோதனைகளிலும் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பதவி வகித்த காலத்தில் 654 சதவீதம் சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் தகவல்கள் எழுந்தது. ஆதாரங்கள் வலுவாக சிக்கியதை தொடர்ந்து, கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னை, பெங்களூரூ, திருப்புத்தூர் உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. சோதனையில் கணக்கில் வராத பல லட்சக்கணக்கில் பணம், அமெரிக்க டாலர்கள், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள், பல கிலோ கணக்கில் தங்கம், வைரம், பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின்போது மணல் சிக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மதுரையில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைத்தது, மணலை விற்றது உட்பட பல ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது.

இவைகள் 3 அமைச்சர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக நடத்தப்பட்டதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல்ராஜன் பகிரங்க குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின்போது ஆவின் முறைகேடு, பாலம், சாலைப்பணி டெண்டர்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில், அடுத்தடுத்து விசாரணை, ரெய்டு வேகமடைந்துள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, ஊழல் மற்றும் முறைகேடாக சொத்து குவித்த அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான அதிரடி நடவடிக்கைகளை தொடர வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிரடி தொடரட்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்