SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக பிரமுகர் இல்ல திருமண விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்பு

2021-09-17@ 00:06:22

மாமல்லபுரம்: லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.காஞ்சி தெற்கு மாவட்டம் செய்யூர் அடுத்த லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் மகனும் லத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளருமான கே.எஸ்.ஆர்.கார்த்திகேயன் - எஸ்.லோகேஸ்வரி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்நது, உதயநிதி ஸ்டாலின்,

 இதில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் அண்ணாநகர் எம்.கே.மோகன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் எழிலரசன், பல்லாவரம் கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த்ரமேஷ், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் பனையூர் பாபு, தீர்மான குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், மாநில இளைஞரணி துணை செயலாளர் தாயகம் கவி, திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.அரசு.

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.புகழேந்தி, காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சி.வி.எம்.சேகர், வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தம் மாலா, டி.வி.கோகுலக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல்மாலிக், மதுராந்தகம் ஒன்றிய செலயாளர்கள் தர், சத்யசாயி, அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செலயலாளர்கள் கண்ணன், தம்பு, சித்தாமூர் ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை சிற்றரசு, சாலவாக்கம் குமார், லத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் மோகன்ராஜ், ராமமூர்த்தி, குப்புசாமி, ஏமநாதன், மகாலட்சுமி, கதிரவன், ரங்கநாதன், பாபு, காந்த், சுரேஷ்குமார், வெங்கடேசன், பிரபாகரன், கே.மாரிமுத்து ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண்மொழிவர்மன், விஜய், சுந்தரமூர்த்தி, வினோத்குமார், ஜெயசூர்யா உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oil-spill-peru-20

  பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

 • af-earthquake-19

  ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

 • Thaipoosam

  ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்