ஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
2021-09-17@ 00:06:21

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மறு புனரமைத்து வளாகத்தில் புதிய சாமி சிலைகள் அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 13ம் தேதி அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி, 14ம் தேதி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாக பூஜை, கும்ப அலங்காரம், 15ம் தேதி அக்கிகார்யம், மூலமந்திர ஹோமங்கள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, அனைத்து விமானங்கள் சமகால மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து வெக்காளியம்மன் மற்றும் மூர்த்திகளுக்கு சமகால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுந்தரவரதன் செய்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தாழக்குடி- பீமநகரி சாலையில் அத்துமீறும் டாரஸ் லாரிகள்
ஆலங்காயம் அருகே 20 நாட்களாக திரிந்த ஒற்றை யானை காட்டிற்குள் விரட்டியடிப்பு
வெம்பக்கோட்ைட அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுப்பு
மேலதிகாரிகள் டார்ச்சர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டாக்டர் தம்பதி தர்ணா
காட்டு யானையை விரட்ட கொண்டு வந்த கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைப்பு
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்