SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூகநீதி காத்த பெரியார்

2021-09-17@ 00:00:15

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை ‘‘சமூகநீதி நாள்’’ என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது திமுக அரசு. ஈரோட்டில் 1879ம் தேதி வெங்கட்ட  நாயக்கர், சின்னத்தாயம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தார் ஈ.வெ.ராமசாமி. பெரும் வணிக குடும்பத்தில் பிறந்தாலும், இளம் வயதிலேயே சமூக சீர்திருத்த செயல்களில் ஈடுபட்டார். அனைத்து சமூகத்தினரும் ஒன்றுதான் என்றதோடு, கலப்பு திருமணங்களையும் முன்னின்று நடத்தி வைத்தார். இதனால் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் காசிக்கு சென்றார். புண்ணியம் தேடி காசிக்கு செல்வோர் பலர்; பெரியாரோ அங்கு சென்ற பின்னரே இறை மறுப்பாளராக திரும்பி வந்தார்.

இறை பக்தியை பயன்படுத்தி சமூகத்தில் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதிலும், சில சமூகத்தினரை ஒதுக்கித் தள்ளுவதிலும் அவருக்கு உடன்பாடில்லை. இதனால் பகுத்தறிவுக் கொள்கையை மக்களிடம் பரப்பினார். கேரள மாநிலம், வைக்கம் என்ற ஊரில் தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து போராடியவர் சிறையிலடைக்கப்பட்டார். இதன்பின்னரே ‘‘வைக்கம் வீரர்’’ என போற்றப்பட்டார். அங்கு மட்டுமல்ல... தமிழகத்திலும் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1925ம் ஆண்டு மக்களிடம் தீரா கொடிய நோயாக இருந்த மூடப்பழக்க வழக்கங்களை அகற்ற சுயமரியாதை இயக்கத்தையும், குடியரசு நாளிதழையும் தொடங்கினார்.

இதன்மூலம் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் பரப்பினார். இதனால் ‘‘பகுத்தறிவு பகலவன்’’, ‘‘தந்தை பெரியார்’’ என போற்றப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். 1944ம் ஆண்டு திராவிட கழகத்தை தோற்றுவித்தார். பத்திரிகை வாயிலாகவும், மேடைப்பேச்சு மூலமாகவும் சமூக சீர்திருத்த கருத்துகளை மக்கள் மனதில் விதைத்தார். இறுதி காலங்களில் உடல்நிலை வாட்டி எடுத்தாலும் அவரது சமூகப்பணி ஓயவில்லை. சிறுநீர் பையை சுமந்தபடியே சென்று, சிரமத்திற்கிடையே பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசிய அவரது துணிச்சலை பாராட்டாதவர்களே கிடையாது. இறுதிவரை சமூக சீர்திருத்தக் கொள்கைக்காக வாழ்ந்த பெரியார், 1973, டிச. 24ம் தேதி காலமானார்.

இறைமறுப்பு கொள்கையாளர் என்ற ஒற்றைப் பார்வையில் மட்டும் நாம் பெரியாரை சுருக்கி விட முடியாது. அனைவருக்கும் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என அவருக்கான கொள்கை முகங்கள் ஏராளம். “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” - என்றார்  பெரியார். இதுபோன்ற பகுத்தறிவு சிந்தனைகள், கொள்கைகளால்தான் ஒரு நூற்றாண்டை தாண்டியும் அவரது புகழ்கொடி உயர, உயர பறந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டு சென்றாலும், அந்த புகழை மறைக்கவோ, மறுக்கவோ யாராலும் முடியாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்