'உள்ளாட்சி தேர்தலில் பணிசெய்ய விடாமல் தடுக்கும் சதி'!: நாங்க எதையும் சந்திப்போம்..கே.சி.வீரமணி வீட்டில் நடக்கும் ரெய்டு பற்றி ஜெயக்குமார் கருத்து..!!
2021-09-16@ 14:56:17

சென்னை: அதிமுகவினரை பழிவாங்க திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக பயப்படாது என்றும் அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்தலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜெயகுமாருக்கு அமைச்சர் சக்ரபாணி பதிலளித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.சி.வீரமணி மீது புகார்கள் வந்திருக்கும், அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என்றார். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் சக்ரபாணி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவினர் தான் வலியுறுத்துகின்றனர் என்றும் பதிலடி கொடுத்தார்.
மேலும் செய்திகள்
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை!: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்..அண்ணா பல்கலை..அறிவிப்பு..!!
அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும் : மநீம ட்வீட்
ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து போலீசார் அபராதம் வசூல்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை,
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!