SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணைந்து தடுப்போம்

2021-09-16@ 01:26:28

கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த 1ம்  தேதி முதல் 9, 10, 11,  மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்  திறக்கப்பட்டு, சுழற்சி  முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 1 முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக  பள்ளிகளுக்கு செல்லாமல் உள்ளனர். தற்போது பள்ளிக்கு சென்று வரும் 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை கொரோனா  பாதிப்பில் இருந்து பாதுகாக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கை  மேற்கொண்டாலும், பாதிப்பை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து 14 நாட்களே ஆன நிலையில், தமிழகம் முழுவதும் 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை  இவ்வாறு இருக்க, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்  திறப்பு எப்போது என்ற விவாதம் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இரண்டாவது கட்ட ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

மேலும், சென்னை கோட்டூர்புரம் அண்ணா  நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்  மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்து  முடிந்துள்ளது. இது சம்பந்தமான அறிக்கை, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட  உள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு  குறையாமல், பள்ளிகளை முழுமையாக திறப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது.  எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசுடன், மக்கள், கைகோர்த்து  செயல்படுவது அவசியமாகிறது.

அதாவது, அறிகுறி ஏதேனும் இருந்தால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமலும், மாணவர்கள் பள்ளிக்கு  செல்லும்போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும், அவர்கள் அக்கம்பக்கத்தில் வேறு பகுதிக்கு செல்லாமல் நேரடியாக வீடு திரும்பும் வகையிலும்  பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாக உள்ளது. மாணவர்கள், தினமும் காலை நேரத்தில் பள்ளிக்குள் நுழையும்போது அவர்களது உடல் வெப்பநிலையை தவறாமல் பரிசோதிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர்வது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை தவறாமல் கவனித்துக்கொள்ள வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாக உள்ளது.

இந்த விஷயத்தில்  பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டாமல் மட்டுமே, கொரோனா  தாக்குதலை முற்றிலும் விரட்டியடிக்க முடியும். மேற்கண்ட விதிமுறைகளை, மிகுந்த  கவனத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அணுகும்போது, பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் என்பதை அடியோடு தடுக்க முடியும். அதன் அடிப்படையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளையும் திறப்பது சிறந்ததாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்