SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து மான்செஸ்டர் யுனைட்டட் அதிர்ச்சி தோல்வி: ரொனால்டோ கோல் வீண்

2021-09-16@ 00:02:59

ஜூரிச்: மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் மீண்டும் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோ அபாரமாக கோலடித்தும், அந்த அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நேற்று தொடங்கியது. சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பிஎஸ்சி யங் பாய்ஸ் (சுவிட்சர்லாந்து),  மான்செஸ்டர் யுனைட்டட் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

இத்தாலியின் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இணைந்துள்ளார். அவர் சேர்ந்த பிறகு நடைபெறும் முதல் ஆட்டம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் சக வீரர் பெர்னாண்டஸ் வாகாக கடத்தி தந்த பந்தை ரொனால்டோ அழகாக கோலாக்கினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய மான்செஸ்டர் வீரர் ஆரோன் வான் பிஸ்ஸகா  சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.

அதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆனாலும்  முதல் பாதி வரை  1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் முன்னிலை வகித்தது. 2வது பாதியில்  யங் பாய்ஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சக வீரர் ஹெப்டி துல்லியமாக பாஸ் செய்த பந்தை யங் பாய்ஸ் வீரர்  மவுமி நகமலு (66வது நிமிடம்) எதிரணி வலைக்குள் திணித்தார். அதனால்  1-1 என்ற கோல் கணக்கில்  ஆட்டம் சமநிலைக்கு வந்தது.

அதன் பிறகு ஆட்டம் முடியும் வரை இரு தரப்பும் கோலடிக்கவில்லை. காயம் உள்ளிட்ட காரணங்களால் இடை நிறுத்தப்பட்ட நேரத்தை ஈடு செய்ய அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் (90+5) தியோசன்  சிபாட்ச்சு  கோலடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனால் யங் பாய்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோ கோல் அடித்தும், மான்செஸ்டர் யுனைட்டட் தோல்வியைத் தழுவியது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்தியது.

ஜுவென்டஸ் முதல் வெற்றி: ரொனால்டோ இல்லாமல் சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்கிய ஜூவென்டஸ் (இத்தாலி) அணி, எச் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் மால்மோ (சுவீடன்) அணியை எதிர்கொண்டது. சுவீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த அந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்