SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகை ராதா புகார் உள்பட 2 புகாரை வாபஸ் வாங்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டல

2013-12-05@ 00:32:34

சென்னை: நடிகை ராதா புகார் உள்பட 2 புகாரை வாபஸ் வாங்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட தொழில் அதிபர் பைசூலின் சகோதரி கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் பட கதாநாயகி ராதா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தொழில் அதிபர் பைசூல் என்பவர் தன்னை காதலித்து மோசடி செய்து விட்டார். தன்னிடம் வாங்கிய ரூ.50 லட்சம் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் ஆபீசில் புகார் கூறி இருந்தார்.

இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த 2 புகார் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி (46), போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:

சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும்.

நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம்.

இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்