SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து வெளியே வாருங்கள்'!: மாணவர்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்..!!

2021-09-15@ 12:13:42

மதுரை: மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் 'சனாதனம் பெண்களை ஒடுக்கும் கருத்தியல்' என்ற புத்தகத்தை தொல் திருமாவளவன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார பாராட்டுகிறோம் என்று தெரிவித்தார். மேலும், ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவ செல்வங்கள் மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து வெளியே வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தி பேசக்கூடிய மக்கள் மட்டுமே நீட் தேர்வால் பயனடைவார்கள் என்று தெரிவித்த அவர், மாநில பாடங்களை பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்