SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தல்!!

2021-09-15@ 11:41:55

சென்னை : 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் , மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து பேசி சுமுக முடிவு செய்திட வேண்டும் என மாவட்ட கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் ” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்