SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணாவின் பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

2021-09-15@ 10:59:42

சென்னை : அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதே போல, சென்னை அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சரித்திர நாயகன் அண்ணாவை நினைவு கூறுகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!,'எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்