SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா இறப்பு சான்றிதழ் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

2021-09-15@ 00:20:23

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘கொரோனா பாதிப்பால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்தை வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என கூறினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை 6 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும்’’ என கடந்த ஜூன் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரீபக் பன்சால் தரப்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தொடரப்பட்டுள்ளது.

அதில், ‘‘கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்களுக்கு, நிவாரணம் மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை நான்கு முறை ஒன்றிய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதியாக செப்டம்பர் 11ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால் ஒன்றிய அரசு மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்