SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டில் கொள்ளை

2021-09-15@ 00:19:14

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(61). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் நேற்று சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த திருட்டு குறித்து நாராயணன் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்