SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் தங்க முகமூடி

2021-09-14@ 19:25:38

பீஜிங்: மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய தங்க முகமூடி ஒன்று, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிச்சுவான் மாகாண கலாசார பாரம்பரிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 37.2 சென்டிமீட்டர் அகலம், 16.5 செ.மீ உயரம் கொண்ட இந்த தங்க முகமூடி சிச்சுவான் மாகாணத்தின் குவாங்கனில் உள்ள சான்சிங்டி இடிபாடுகள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 100 கிராம் (0.22 பவுண்டுகள்) எடையுடையது.

இந்த முகமூடியானது, கி.மு 1046 இல் முடிவுக்கு வந்த ஷாங் வம்சத்தின் பிற்பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 பாரம்பரியப் பொருட்களில் இந்த கலைப்பொருளும் ஒன்றாகும் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்