SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் புகாரோடு வந்த மகளிர் அணி நிர்வாகியை மேடையில் இருந்து தள்ளிவிட்ட தாமரையின் மாவட்ட தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-14@ 00:33:47

‘‘தாமரைக்கு் தாவ மன்னர் வாரிசு முடிவு பண்ணியிருக்காராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தொண்டைமான் மாவட்டத்தில் மன்னர் வாரிசானவர்  ஆரம்பத்தில் ஓபிஎஸ் பக்கம் சென்றார். இவருக்கு நெருக்கமானவர்களான மாஜி நகர்மன்ற தலைவர், மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர். தேர்தலில் தொண்டைமான் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்று மன்னர் வாரிசானவர் தோல்வியை சந்தித்தார். இபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளடியே இதற்கு காரணம் என தெரிந்தது. இலைகட்சி, ஓபிஎஸ்சை நம்பி இருந்தால் பணம் மட்டுமல்லாமல் மன்னர் வாரிசுக்கான செல்வாக்கையும் விரைவில் இழந்து நடுத்தெருவில் தான் நிற்க வேண்டியதற்கும் என நினைத்த மன்னர் வாரிசானவர் மத்தியில் ஆளும் கட்சிக்கு தாவ முடிவு எடுத்திருக்கிறாராம். இதற்காக மும்பையில் தாமரை கட்சி எம்எல்ஏவாக உள்ள உறவினரின் உதவியை நாடியுள்ளார். மன்னர் வாரிசுடன் அவருக்கு நெருக்கமானா மாஜி நகர்மன்ற தலைவரும் தாவ உள்ளார் என சொந்த கட்சிக்குள்ளே பேச்சு ஓடுகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதிமுக ஆட்சியில், மதுரை  மாநகராட்சியில் தகுதியில்லாதவர்களுக்கு பொறியாளர் பதவி உயர்வு வழங்கி  அதிமுகவினர் கமிஷனை கல்லா கட்டிக் கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு  வந்துள்ளதாமே..’’

‘‘ஆமா..  1994ல் அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சியில் சுகாதாரப்பிரிவில் சேர்ந்த  பெண், பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார்.  பணியில் இருக்கும் போதே மாநகராட்சி, அரசு அனுமதியில்லாமல் கர்நாடக  மாநிலத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். இதற்கான ஊதியமும் பெற்று  வந்துள்ளார். 2012ல் தணிக்கையில் அரசு அனுமதியில்லாமல் பட்டம் பெற்று,  அதற்கான ஊதியத்தை பெற்றது தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது.  அதுபற்றி மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லையாம். மாநகராட்சியில்  அதிமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் ஆதரவால், அவரின் சிபாரிசில், அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு  வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்  சட்டப்படிப்புக்கான மேல்நிலை படிப்பு படித்ததாக கூறி, இவருக்கு மதுரை  மாநகராட்சியில் ஒரே ஆண்டில் கண்காணிப்பாளர், சட்டப்பிரிவில் பதவி  வழங்கப்பட்டதாம். ஆட்சி மாற்றத்திற்குப்பின் தகுதியில்லாதவர்களை மீண்டும்  களையெடுத்த ஆணையர், தகுதிக்குரிய நபர்களுக்கு பதவி வழங்கியுள்ளார். அந்த  ஆய்வின் போது, இந்த பெண் அதிகாரி பற்றிய ஆவணங்களும் கிடைத்துள்ளது.  சட்டப்படிப்புக்கான முறையான யுஜிசி அனுமதியை இந்த பல்கலைக்கழகம் பெறவில்லை  என தற்போது தகவல் தெரியவந்துள்ளது. இந்த பெண் அதிகாரி மீது நீதிமன்றத்தில்  தற்போது வழக்கு தொடரப்பட்டதால், தீர்ப்புக்காக மாநகராட்சி உயரதிகாரிகள்  காத்திருக்கின்றனர்’’என்றார் விக்கியானந்தா.

‘‘நாகர்கோவில் மாநகராட்சியாக  அறிவிக்கப்பட்ட பின், உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் தொடர்பாக  எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளிவராத நிலையில் அதிமுக,  பா.ஜ. கூட்டணியில் தற்போது மேயர் பதவியை குறி வைத்து முட்டல், மோதல்  ஏற்பட்டு வருதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான்.  அதிமுகவுக்கு தான் மேயர் சீட் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய  கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் உறுதி  கொடுத்துள்ளாராம். கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது அவர்  மாநகர பிரச்சினைகளில் அறிக்கை விடுகிறாராம். ஏற்கனவே நாகர்கோவிலில் சாலைகள்  மோசமாக உள்ளது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, நாகர்கோவில் தொகுதி  எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.காந்தி தரப்பை அப்செட் ஆக்கியது.

 நம்ம  தொகுதியில், பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ. அறிக்கை விடுகிறாரே என ஆதங்கத்தில்  இருந்து வந்த நிலையில், தற்போது நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினை  தொடர்பாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மீண்டும் அறிக்கை விட்டுள்ளார். தொகுதி  எம்.எல்.ஏ., அமைதி காக்கும் நிலையில், மீண்டும் அடுத்த தொகுதி எம்.எல்.ஏ.  ஏன் இதில் ஆர்வம் காட்டுகிறார் என கேள்வி எழுந்துள்ளதாம். கன்னியாகுமரி  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கியமான ஊராட்சிகள், பேரூராட்சிகள்  நாகர்கோவில் மாநகர எல்லை விரிவாக்கத்தின் போது, மாநகராட்சி பகுதியுடன்  இணைக்கப்பட உள்ளன. இந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. நிதியை பயன்படுத்த  வேண்டுமானால், மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதிமுகவை  சேர்ந்தவர் வெற்றி பெற்று மேயர் ஆனால், தனது ெதாகுதிக்குட்பட்ட பகுதிகளில்  வளர்ச்சி பணிகளை வேகமாக செய்ய முடியும் என்ற எண்ணத்திலேயே மாநகராட்சி மேயர்  பதவிக்கான காய் நகர்த்தலுக்கான அறிகுறியாக அதிமுகவின் இந்த அறிக்கை  பார்க்கப்படுகிறது என்று பேசிக் ெகாள்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புகார் கொடுக்க சென்ற பெண்ணை தாமரை நிர்வாகி மேடையில் இருந்து தள்ளிவிட்ட விவகாரம் சர்ச்சையாகி இருக்காமே..’’ ‘‘புரம்  கொண்ட மாவட்டத்தில் தாமரை கட்சியின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டம்  நடந்தது. இதில், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு கூட்டத்தை  நடத்தி முடித்தாராம். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இக்கூட்டத்தில்,  மாவட்ட தலைவர் மீதான புகார்கள் அடுக்கடுக்காக சென்றதாம். பதவியிலிருந்து  நீக்கக் கோரி அவர் முன்பே நிர்வாகிகள் பலரும் மேடைக்கே சென்று  புகார்அளித்தார்களாம். இதை பார்த்த, மகளிர்அணி நிர்வாகி ஒருவர், மாவட்ட  தலைவர் மீது பாலியல் புகார் அளிக்க, வீட்டிலே எழுதி தயார்படுத்தி எடுத்த  வந்த மனுவை கூட்டத்திற்கு கொண்டு வந்தாராம். மேலிட பொறுப்பாளர் மேடை  ஏறிய உடனே, அந்த பெண் புகார் மனுவுடன் மேடைக்கு செல்ல முயன்றாராம்.  மகளிர்அணி நிர்வாகி மனுவுடன் வருவதை பார்த்த மாவட்டம் நம் மீதுதான் புகாரென  உஷாராகி, தன்னுடையை ஆளை விட்டு மனுவை பிடுங்கி மேடையிலிருந்து கீழே  தள்ளிவிட்டார்களாம். மேடையில் மாவட்டம் தப்பித்தாலும், மேலிட பொறுப்பாளர்  புறப்படும்போது பாலியல் புகார் மனு கைக்கு சென்றுவிட்டதாம்’’ என்றார்  விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்