பொன்னேரியில் மெகா லோக் அதாலத் 568 வழக்குகளுக்கு தீர்வு
2021-09-13@ 01:23:24

பொன்னேரி: பொன்னேரியில் நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் 568 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பொன்னேரியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் 1,2, உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந் நிலையில் நேற்றுமுன்தினம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மெகா லோக் அதாலத் மக்கள் நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள், நில சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 568 வழக்குகள் பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 3,15,53,100 சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதில் கூடுதல் சார்பு நீதிபதி விஜயராணி, முதன்மை சார்பு நீதிபதி பாஸ்கர், கூடுதல் சார்பு நீதிபதி காரல்மார்க்ஸ், குற்றவியல் நீதித்துறை நடுவர் 2, விஜயலட்சுமி பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திவ்ய குமார், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்மணி, செல்வம், குமரன் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.
மேலும் செய்திகள்
ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி!
கும்பக்கரை அருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி..!!
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏப்.1-ம் தேதி கொண்டாட ஏற்பாடு: ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடக்கம்
நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம், பாஜவின் அச்சத்தை காட்டுகிறது: நடிகை ரோகிணி பேச்சு!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!