யுஎஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பைனலில் லெய்லா- எம்மா மோதல்
2021-09-11@ 00:42:50

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், டீனேஜ் வீராங்கனைகள் எம்மா ரடுகானு (இங்கிலாந்து), லெய்லா பெர்னாண்டஸ் (கனடா) இன்று மோதுகின்றனர். அரை இறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியுடன் (18வது ரேங்க், 26 வயது) மோதிய எம்மா ரடுகானு (18 வயது, 150வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக, கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறிய முதல் தகுதிநிலை வீராங்கனை என்ற சாதனையை ரடுகானு படைத்துள்ளார். மேலும், 44 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாடும் முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
முன்னதாக 1977 விம்பிள்டன் பைனலில் இங்கிலாந்தின் வர்ஜினியா வேடு விளையாடி இருந்தார். மற்றொரு அரை இறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்காவுடன் (2வது ரேங்க், 23 வயது) மோதிய லெய்லா பெர்னாண்டஸ் (19 வயது, 73வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சபலென்கா 6-4 என கைப்பற்றி 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்ட லெய்லா 7-6 (7-3), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 21 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். இவர் ஏற்கனவே நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா, 5வது ரேங்க் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை வெளியேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனைகள் எம்மா ரடுகானு - லெய்லா பெர்னாண்டஸ் மோதவுள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராண்ட் ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பைனைலில் 8வது முறையாக டீனேஜர்கள் மோதவுள்ளனர். கடைசியாக 1999 யுஎஸ் ஓபன் பைனலில் பதின்ம வயது வீராங்கனைகளாக செரீனா வில்லியம்ஸ் - மார்டினா ஹிங்கிஸ் மோதியிருந்தனர்.
மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!