SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை கட்சி வாலிபர் சங்கத்து ஆள் மாயமான கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-09-11@ 00:41:57

‘‘பணியாளர் வரவில்லை என்று  மருந்தக ஆய்வகத்தையே பூட்டி வைத்துள்ளார்களே..’’ என்றார், பீட்டர் மாமா.
 ‘‘நாகர்கோவிலில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் ஆய்வகம் உள்ளது. நோயாளிகளுக்கு ரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அது தொடர்பான முடிவுகள் அடிப்படையில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். தற்போது ஆய்வகத்தில் ஒரே ஒரு பணியாளர் மட்டும் பணியில் இருந்து வந்தார்.  அவரும் கடந்த செப்டம்பர் 2 முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். அத்தியாவசிய பணியில் ஒரே பதவி வகிப்பவர் விடுப்பு எடுத்தால் உடனே மற்ற மருந்தகத்திலிருந்து பதில் நபரை மாற்று பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் நாளிது வரை அது செய்யப்பட வில்லை. மாறாக ஆய்வகத்தையே பூட்டி வைத்துள்ளார்கள். இதனால் தினமும் காப்பீட்டாளர்கள் வந்து பரிசோதனை செய்ய முடியாமல் திரும்பி செல்கின்றனர். ஆய்வக அறை 15 நாட்களுக்கு திறக்காது என்கின்றனர். இதனை கவனிக்க வேண்டிய அதிகாரியும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை என்று புலம்புகின்றனர் தொழிலாளர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை கட்சி இளைஞரணி தலைவர் திடீரென மாயமாகி விட்டாராமே.. என்ன பிரச்னை’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘டெக்ஸ்டைல்ஸ்  மாவட்டத்தில் தாமரை கட்சி மாவட்ட இளைஞரணி தலைவராக விநாயகர் பெயரை முதல்  பெயராக கொண்டவர் உள்ளார். பல்வேறு தொழில்களை செய்து வரும் இவர், கந்துவட்டி  தொழிலையும் கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறார். இதனால் பல குடும்பங்கள்  இவரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கிறார்களாம்... கந்து வட்டி  தொழில் நடத்தி வரும் இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சமீபத்தில்  பல்வேறு அமைப்புகள் நோட்டீஸ் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். கந்து  வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞரணி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு மேல் புகார் சென்றதாம்.  தமிழகத்தில் இலைகட்சியுடன் தாமரை கட்சி கூட்டணி இருந்ததால் கூட்டணியில்  உள்ள இளைஞரணி தலைவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என காக்கிகளும்  தயக்கம் காட்டி வந்தார்களாம்...
தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்னை  விசுவ ரூபம் எடுத்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றத்தால் கந்து வட்டிக்கு பணம்  கொடுத்து மக்களை சிரமப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட  காவல்துறைக்கு உத்தரவு வந்துள்ளதாம்.. டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கந்து  வட்டியில் கோலோச்சி வந்த அனைவரின் பெயரையும் காக்கிகள் தற்போது லிஸ்ட்  எடுத்து வருகின்றார்களாம். கடந்த ஆட்சியில் தாமரை கட்சி இளைஞரணி மாவட்ட  தலைவர் மீது குவிந்த புகார் மனுக்களை தற்போது காக்கிகள் தூசி தட்டி  எடுத்துள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட தலைவர், எந்த நேரத்திலும் கைது ஆகலாம்  என்ற பயத்தில் திடீர் தலைமறைவாகி விட்டதாக சொந்த கட்சிக்குள்ளே அரசல்  புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி எம்எல்ஏ பேனரை கிழிக்க சொன்னாராமே மாவட்ட தலைவர்..’’
 ‘‘புரம்  கொண்ட மாவட்டத்தில் தாமரை கட்சியின் தலைவராக பழம் கட்சியில் இருந்து வந்த  மாஜி எம்எல்ஏ செயல்பட்டு வருகிறார். காம லீலைகளுக்கு பெயர் போன இவர் மீது  மகளிர் புகார்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே பெண் புகாரில் சிக்கிய  பாஜ பெரும் தலையின் தயவு அப்போது இருந்ததால் தப்பிவிட்டாராம். இவ்வளவு  அமளி, துமளி நடந்தும் இரவு 10 மணிக்கு மேல் பெண் நிர்வாகிகளுக்கு போன்  செய்து ஜொள்ளு வடிப்பது நிற்கவில்லையாம். எப்போது வேண்டுமானால் இவரது ஆடியோ  வெளியாகலாம் என்கின்றனர். தற்போது இந்த விவகாரம் பாஜ தலைமையின்  கவனத்துக்கு போயிருப்பதால், இவரை தூக்கி வீச நேரம் பார்த்து  இருக்கிறார்களாம். இந்நிலையில் தாமரை கட்சிக்கு, புதுவரவாக முரசு உள்ளிட்ட பல கட்சிகளுக்கு சென்று வந்த மற்றொரு மாஜி எம்எல்ஏ இணைந்திருக்கிறாராம்.  ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 மாஜி எம்எல்ஏக்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்  கொள்வதில் போட்டிகள் துவங்கிவிட்டதாம். இதனால் புதுசா வந்த மாஜி எம்எல்ஏவை  டம்மியாக வைக்க, பேனரில் பெயர் கண்டால் கூட விட்டுவைப்பதில்லையாம். விழுப்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் புதுவரவு மாஜி  எம்எல்ஏ பெயர் இடம் பெற்றதைக் கண்டு நிர்வாகிகளிடம் சத்தம்போட்டு அந்த  பேனரை கிழித்துபோட சொல்லியிருக்கிறாராம் மாவட்ட தலைவர். இந்தநிலையில்  புதுசா வந்த மாஜி எம்எல்ஏவுக்கு உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியிருப்பது, மேலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். தாமரை கட்சியில் 2 மாஜி எம்எல்ஏக்கள் மல்லுக்கட்டி வருவதை கட்சியினர் வேடிக்கை  பார்த்தது வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்