SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலர்களின் காவலர்

2021-09-11@ 00:40:11

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழக காவல்துறையில் 14,137 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்காக ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் காவலர்களின் பணிச்சுமை வெகுவாக குறையும். ஏற்கனவே காவலர்கள் ஓய்வின்றி பணிகளை தொடர்வதால், மன அழுத்தத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஓராண்டில் சுமார் 27 போலீசார் வரை தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

காவலர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகள், வெளியூர் சுற்றுலா என காவலர்கள் தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர். தமிழக மாநகராட்சிகளில் பணியாற்றும் காவல்துறை துணை கமிஷனர்களின் அதிகாரவரம்பை மாற்றியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே காவல்துறையில் குற்றப்பிரிவு, சட்டம், ஒழுங்கு பிரிவினரிடையே ஒரு ‘‘ஈகோ மோதல்’’ இருந்தது. குற்றப்பிரிவை விட, சட்டம், ஒழுங்கு பிரிவே உயர்வானது என்ற எண்ணம் இருந்து வந்தது. குற்ற சம்பவங்கள் தங்கள் அதிகார எல்லையில் நடக்கும்போது, யார் விசாரணை நடத்துவது என்ற குழப்பமும் நீடித்தது.  

இதனை தவிர்க்க குற்றம், சட்டம், ஒழுங்கு பிரிவுகளை ஒருங்கிணைத்து, மாநகராட்சிகளை இரு பிரிவுகளாக பிரித்து துணை கமிஷனர்களின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் இனி யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பாகுபாடின்றி வழக்கு விசாரணை நடைபெறும். அரசின் இந்த அணுகுமுறை காவல்துறையினர் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சூழலில், ஐகோர்ட் மதுரை கிளையில் கரூரை சேர்ந்த ஓய்வு காவலர் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள் என்.கிருபாகரன் (ஓய்வு), பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காவலர் பிரச்னைகளை தீர்க்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், காவல்துறை ஆணையம் அமைக்க வேண்டும். இதர அரசு துறையினரை விட 10 சதவீதம் கூடுதல் ஊதியம், காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயித்து, சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டுமென கூறி உள்ளனர். நாளை மறுதினம் (செப்.13) சட்டப்பேரவையில் காவலர் மற்றும் தீயணைப்புத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த அறிவிப்புகள் தங்களது வாழ்வில் வசந்தம் வீசும் அறிவிப்புகளாகவே இருக்குமென காவலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். காவலர்களின் காவலரான முதல்வர் அவ்வாறே செய்வார் என எதிர்பார்க்கலாம்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்