ராஜ்யசபா எம்.பி. பதவி யாருக்கு?: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மோதல்..!!
2021-09-09@ 12:51:01

புதுச்சேரி: புதுச்சேரி வாயிலாக தேர்வுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பிடிக்க ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 6ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே போட்டி நிலவுகிறது.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் என்.ரங்கசாமி பிடிவாதமாக உள்ளார். அவருக்கு அழுத்தம் கொடுத்து எம்.பி. பதவியை பெறுவதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. இதனால் தம்மை தொடர்பு கொள்ளும் பாஜக மேலிட தலைவர்களை ரங்கசாமி புறக்கணித்து வருகிறார். அண்மையில் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுபெற வேண்டியுள்ளது.
எனவே அவருக்கு எம்.பி. பதவியை கொடுக்கவே பாஜக முயற்சி செய்வதாக ரங்கசாமி கருதுகிறார். ஏற்கனவே சபாநாயகர் பதவி, அமைச்சரவையில் பங்கீட்டில் ரங்கசாமிக்கும், பாஜக மேலிடத்திற்கும் மோதல் ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூக முடிவு எட்டப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் செய்திகள்
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!